நீதிமான் நான் நீதிமான் நாம்
இரத்தத்தாலே கழுவப்பட்ட நீதிமான் நான் இயேசுவின்
1.
பனைமரம் போல் நான் செழித்தோங்குவேன்
கேதுரு மரம்போல் வளர்ந்திடுவேன்
கர்த்தரின் இல்லத்தில் நாட்டப்பட்டு
முதிர்வயதிலும் நான் கனி தருவேன் – நீதிமான்
2.
காலையிலே உம் கிருபையையும்
இரவினிலே உம் சத்தியத்தையும்
பத்து நரம்புகள் இசையோடு
பாடிப் பாடி மகிழ்ந்திருப்பேன் – நீதிமான்
3.
ஆண்டவனே என் கற்பாறை
அவரிடம் அநிதீயே இல்லை
என்றே முழக்கம் செய்திடுவேன்
செழுமையும் பசுமையுமாய் வளர்வேன் – நீதிமான்
4.
ராஜாவின் ஆட்சி வருகையிலே
கதிரவனைப் போல் பிரகாசிப்பேன் இயேசு
ஆகாயமண்டல விண்மீனாய்
முடிவில்லா காலமும் ஒளிவீசுவேன் – நீதிமான்
5.
எதிரியின் வலிமையை மேற்கொள்ள
அதிகாரம் எனக்குத் தந்துள்ளார்
புது எண்ணை அபிஷேகம் என் தலைமேல்
பொழிந்து பொழிந்து மகிழ்கின்றீர் – நீதிமான்
6.
கர்த்தரின் கண்கள் என் மேலே
என் வேண்டுதல் கேட்கின்றார்
மன்றாடும் போது செவிசாய்த்து
மாபெரும் விடுதலை தருகின்றார் – நீதிமான்